Wednesday, February 8, 2012

Java Videos

http://www.java-videos-promotions.blogspot.in/

நான் சின்னப்பையனா இருந்தப்போ....



வாசிங் பவுடர் நிர்மாதான் கலக்கலான விளம்பரம் 


-

எப்படா பெரிய பையன் ஆவோம்னு நினைச்சிருக்கேன் 


-


வாத்தியாருக்கு அகத்திக் கீரை பொறிச்சிட்டு வர்றதும்படிப்பின் ஒரு அங்கம் 


-

பள்ளிக்கூடம் போகும்போது முட்டாயி வாங்கிக்கனு ஊட்ல 5 காசு குடுப்பாங்க 


-

புள்ள புடிக்கிறவன் வந்து புடிச்சிக்கிட்டுப் போய்டுவான்னு பயப்படுவோம்


-

விடிய விடிய பேய் ஓட்டுறதை வேடிக்கை பார்ப்போம்


-

தண்ணிய பயமில்லாம நம்பி குடிக்கலாம் 


-

திருவள்ளுவரும் ஒரு குறிப்பிடத்தகுந்த எதிரி 


-

செல்போன்னு ஒன்னு வரும்னு நினைச்சதேயில்ல 


-

எம்ஜிஆர் சாவாரு, கருணாநிதி ஆட்சிக்கு வருவார்னெல்லாம் யாருமே நினைச்சதில்ல 


-

குருவி வளர்த்திருக்கேன் 


-

சாராயக்கடை, கள்ளுக்கடை எல்லாம் இருந்துச்சு


-

எட்டணா இருந்தா எட்டூருக்கு எம்பாட்டு கேக்கும்


-

பொங்கல் வாழ்த்துதான் பெரிய பொக்கிஷம்


-

எங்க கிராமத்துல ஒரே ஒரு டிவிதான் இருந்துச்சு


-

எந்த திருவிழாவுல பார்த்தாலும்விதிபடவசனம்தான் ஒலிபரப்பாகும்!


-

பள்ளிக்கூடத்துக்கு போடுற காக்கி ட்ரவுசர்ல பின்பக்கம் அப்பப்ப போஸ்ட்பாக்ஸ் அமைஞ்சிடும் 


-

மைக்செட் கட்டிக்கிட்டு விளம்பர நோட்டீஸ் போட்டுக்கிட்டு போற கார் பின்னாடியே ஓடுவோம் 


-

சினிமா போஸ்டர் ஒட்ற ஆளையே ஹீரோ கணக்கா பார்ப்போம்


-

இப்படி ஆயிரம் கோடி லட்சம் கோடி யாரும் கொள்ளையடிச்சதில்ல


-

எம்ஜிஆர் முதலமைச்சரா இருந்தாரு 


-

ரேடியோ பெட்டிக்குள்ளே குட்டிக்குட்டி மனுசங்க இருக்காங்களான்னு ஆராய்ச்சி பண்ணியதுண்டு 


-

டிவியில படம் தெரியறதுக்கு முன்ன புள்ளிபுள்ளியா ஓடுறத வாயத்தெறந்துட்டுப் பார்ப்போம் 


-

எழவெடுத்த செல்போனும், ஈமெயிலும் இருந்ததில்ல


-

வாய்க்கும் (ஊள)மூக்குக்கும் உதடு வழியா ஒரு பைபாஸ் ரோடு இருக்கும் 


-

முதநாள் பார்த்த சினிமாவுக்கு கிளாஸ்ல கதை சொல்வோம் 


-

மாட்டுவண்டி கடையாணிய கழட்டிஐஸ்க்காரருக்கு போட்ருவோம் 


-

கடிச்சுக்கடிச்சே சட்டைக் காலரு பிஞ்சுபோயிரும் 


-

ஈர மணல்ல தேங்காய் தொட்டியில இட்லி சுடுவோம் 


-

யாரு ரஜினி கட்சி யாரு கமல் கட்சினுதான் சண்டை


-

தலையில நிறைய முடி இருந்துச்சு